;
Athirady Tamil News

திருமணத்திற்கு சென்று திரும்பியபோது மினி பஸ் கவிழ்ந்து விபத்து- 25 பேர் பலி!!

0

வடக்கு ஆப்கானிஸ்தானில் மினி பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மக்கள் மினி பஸ்ஸில் சயாத் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் செய்துக் கொண்டிருந்தனர். சார்-இ-புல் மாகாணத்தில் தரமற்ற சாலைகள் கொண்ட மலைப் பகுதியில் மினி பஸ் சென்றுக் கொண்டிருந்தபோது பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து உள்ளூர் காவல்துறைத் தளபதியின் செய்தித் தொடர்பாளர் தின் முகமது நசாரி, விபத்துக்கு மினிபஸ் ஓட்டுனரின் கவனக் குறைவே காரணம் என குற்றம் சாட்டினார். ஆப்கானிஸ்தானில் மோசமான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் அடிக்கடி போக்குவரத்து விபத்துக்கள் நடப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.