யாழ் மாவட்ட விளையாட்டுத்துறைசார் தேவைகளை தீர்த்து வைக்குமாறு அங்கஜன் கோரிக்கை!!
யாழ் மாவட்ட விளையாட்டுத்துறைசார் தேவைகளை தீர்த்து வைக்குமாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசனை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று (08) காலை குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பில், தற்போது யாழ் மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் சாதிக்கும் இளைஞர் யுவதிகள் தொடர்பாக எடுத்துரைத்த அங்கஜன் இராமநாதன்,அவர்களுக்கான பயிற்சி வசதிகள், வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க விளையாட்டுத்துறை அமைச்சு கவனமெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.