இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது!!
இந்திய எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தான் டிரோன்கள் அத்துமீறி நுழைந்து வருகிறது. கடந்த வாரம் 3 கிலோ கஞ்சா கட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் டிரோன் பஞ்சாப் மாநிலத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு அமிர்தசரசில் உள்ள பைனி ராஜ்புட்னா என்ற கிராமத்தில் சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் டிரோன் சந்தேகத்திற்கு இடமாக பறந்தது.
இதை பார்த்த அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.