IMF ஒப்பந்தத்தின் பிரகாரம் ஹர்ஷ செயற்படவேண்டும்!!
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துக்கொண்டுள்ள ஒப்பந்தம், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. ஆகையால், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர். அதன் பிரகாரமே எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குழுக்கள் மற்றும் ஆலோசனை குழுக்களின் விதிகள் குறித்து அந்த குழுக்களில் பங்கேற்கும் எம்.பி.க்களின் கலந்துரையாடலின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி. சில்வா அரசாங்க நிதி பற்றிய குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.