உக்ரைனுக்காக களமிறங்கும் நேட்டோ படை..! ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை !!
உக்ரைனுக்கு ஆதரவாக போலந்து தலைமையிலான நேட்டோ நாடுகள் படை தரையிறங்கலாம் என, நேட்டோ பாதுகாப்பு முகாமின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆண்டர்ஸ் போஃஹ் ராஸ்முஸன் எச்சரித்துள்ளார்.
ககோவ்கா நீர்மின் நிலைய அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கத்தினால் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்களில் 20,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 40,000 பேர் வெளியேற்றப்படுவர் எனவும் கீவ் நேற்று உறுதிப்படுத்தியது.
பாரிய அணை உடைப்பால் தண்ணீர் பிரச்சனை தலை தூக்கியுள்ளது. இதனால் நாட்டின் தெற்கில் உள்ள தானிய வயல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாலைவனமாக மாறக்கூடும் என உக்ரைனின் விவசாயம் மற்றும் உணவு அமைச்சகம் எச்சரித்தது.
இந்த நிலையில் நேட்டோ பொதுச் செயலாளராக பதவி வகித்த ஆண்டர்ஸ் ராஸ்முஸன், அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களை வெல்ல முடியவில்லை என்றால், போலந்து தலைமையிலான நேட்டோ நாடுகள் உக்ரைனில் துருப்புகளை தரையிறக்க தயாராக இருக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ‘உக்ரைன் கண்டிப்பாக உளவுத்துறைப் பகிர்வு, இராணுவப் பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்குதல் ஆகியவற்றில் நேட்டோ நாடுகளிடம் இருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதங்களைப் பெற வேண்டும்’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நேட்டோ நாடுகளுக்கு இடையே உக்ரைனுக்கான இராணுவ ஆதரவை வலுப்படுத்த போலந்து தயாராக இருக்கும் என்றும், இந்த உதவியைப் பெற உக்ரைனுக்கு உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.