;
Athirady Tamil News

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!!

0

கடந்த 05 வருடங்களில் நாட்டிலுள்ள தலா 5 பேரில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வாகனத்தை இறக்குமதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இவற்றில் 75% வாகனங்கள் வங்கிக் கடனில் பெறப்பட்டவை என அவர் இன்று (09) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

வாகன இறக்குமதிக்கான வரியை டொலரில் செலுத்துவது தொடர்பான யோசனையை எதிர்காலத்தில் முன்வைக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2,498,714 ஆகும்.

2015 இல் – 652,446 வாகனங்கள்
2016 இல் 466,986 வாகனங்கள்
2017 இல் 448,320 வாகனங்கள்
2018 இல் 496,282 வாகனங்கள்
2019 இல் 332,452 வாகனங்கள்
2020 இல் 102,228 வாகனங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.