திருப்பதி கோவில் மீது அடுத்தடுத்து 3 விமானங்கள் பறந்ததால் பரபரப்பு!!
திருப்பதி ஏழுமலையான் கோவில் மீது ஆகம விதிப்படி விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர்கள் கோவில் மீது பறந்தது. இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். இந்த நிலையில் நேற்று அடுத்தடுத்து 3 விமானங்கள் ஏழுமலையான் கோவில் மீது பறந்து சென்றன. இந்த சம்பவம் மீண்டும் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று காலை திருப்பதியில் இருந்து திருமலைக்கு மலைப்பாதையில் வேன் ஒன்று சென்றது.
அப்போது பஸ்சிற்கு வழி விடுவதற்காக வேன் டிரைவர் வேனை வலது பக்கமாக திருப்பினார். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று 70,160 பேர் தரிசனம் செய்தனர். 38,076 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.67 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.