லெபனான்- இஸ்ரேல் எல்லையில் போராட்டக்காரர்கள் கண்ணீர் புகைக்குண்டு வீசி விரட்டியடிப்பு!!
இஸ்ரேல்- லெபனான் எல்லையில் கடந்த புதன்கிழமை இஸ்ரேல் ராணுவம் புல்டோசர் கொண்டு பள்ளம் தோண்டி கொண்டிருந்தது. அப்போது ஒரு முதியவர் எதிர்ப்பு தெரிவித்தபோது, புல்டோசர் தோண்டிய மண்ணில் அவரது கால் சிக்கிக் கொண்டது. புல்டோசரை கொண்டு முதியவரை ஏற்ற முயற்சி செய்தனர். அப்போது ஐ.நா. அமைதிப்படையைச் சேர்ந்த வீரர் இடைமறித்து அந்த முதியவரை காப்பாற்றினார். இந்த நிலையில் இன்று அந்தப்பகுதியில் போராட்டக்காரர்கள் திடீரென ஒன்று கூடி இஸ்ரேல் ராணுவம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதற்காக இஸ்ரேல் ராணுவம் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்துள்ளனர். இதனால் லெபனான் போராட்டக்காரர்கள் மற்றும் வீரர்கள் மூச்சு விட முடியாமல் திணறியுள்ளனர். 2000-ம் ஆண்டு மே மாதம் இஸ்ரேல் ராணுவம் லெபனானின் தெற்கு பகுதியில் ஆக்கிரமித்து இருந்த பகுதியில் இருந்து வெளியேறியது.
தற்போது பிரச்சினை நடைபெற்ற பகுதி லெபனானின் கேஃபர் சௌபா மலைப்பகுதியாகும். இந்த பகுதியுடன் அருகில் உள்ள செபா பண்ணையையும் இஸ்ரேல் 1976 மத்திய கிழக்கு போரின் போது ஆக்கிரமித்து வைத்துள்ளதாக லெபனான் குற்றம்சாட்டி வருகிறது. இன்று சில போராட்டக்காரர்கள் இரு நாட்டு எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலிகளை இஸ்ரேல் ராணுவம் இல்லாத பகுதியில் அகற்ற முயன்றுள்ளனர். அப்போது இஸ்ரேல் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பின்னர் ஐ.நா. பாதுகாப்புப்படையினர், லெபனான் வீரர்கள் போராட்டக்காரர்களை தங்கள் எல்லைக்குள் திரும்பச் செய்ய வைத்தனர்.
2000-க்குப் பிற DO NOT CROSS BLUE LINE என்ற வாசகம் ஐ.நா. அமைதிப்படையால் அரேபிக், ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளில் வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இஸ்ரேல் வீரர்கள், ஏராளமான வாகனங்கள் அந்த இடத்தில் காணப்பட்டு வருகின்றன. 2006-ம் ஆண்டு நடைபெற்ற 34 நாள் சண்டைக்குப்பின் பெரும்பாலும் எல்லை பிரச்சினை வந்தது. கிடையாது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.