;
Athirady Tamil News

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு!!

0

அமெரிக்க முன்னாள் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தான் பதவி விலகும் போது தன்னுடன் பல ரகசிய ஆவணங்களை எடுத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் எடுத்துச்சென்ற சுமார் 200 ஆவணங்களை திருப்பி ஒப்படைக்குமாறு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் டிரம்ப் அதனை திருப்பி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது அவர் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் விவரம் குறித்து இது வரை தெளிவாக தெரியவில்லை. இருந்த போதிலும் ஒரு முன்னாள் அதிபர் மீது இப்படி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் இது தொடர்பாக மியாமி கோர்ட்டில் வருகிற செவ்வாய்க்கிழமை ஆஜராகும் படி சம்மன் வந்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் கூறும் போது நான் குற்றமற்றவன்.ஒரு முன்னாள் அதிபர் அதுவும் வரலாறு காணாத அளவுக்கு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவருக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என எண்ணவில்லை். அமெரிக்க வரலாற்றில் இது ஒரு கறுப்பு தினமாகும். நாம் அனைவரும் ஒன்று இணைந்து அமெரிக்காவை ஒரு ஓழுங்கான நாடாக மாற்ற உழைப்போம் என குறிப்பிட்டு உள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் டிரம்ப் போட்டியிட திட்டமிட்டு உள்ளார். இந்த சூழ்நிலையில் அவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.