மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!!
ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக தெரிவித்து, 10 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு, வேலைவாய்ப்பை பெற்றுத்தரவில்லை என, பாதிக்கப்பட்ட இருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதற்கமைய, பணியக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 65 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.