;
Athirady Tamil News

ஆற்றில் திடீரென படகு கவிழ்ந்ததில் நூலிழையில் உயிர்தப்பிய அமைச்சர்!!

0

தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆவதையொட்டி மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஐதராபாத் அருகே உள்ள கரீம் நகரில் உள்ள ஆசிஃப் நகரில் தெலுங்கானா மாநில ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பகுதிக்கு அங்குள்ள ஆற்றில் படகில் தான் செல்ல வேண்டும். இதில் கலந்து கொள்வதற்காக அந்த மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காங்குலா கமலாகர் படகில் சென்று கொண்டிருந்தார். அப்போது, படகு திடீரென கவிழ்ந்தது. நிலைதடுமாறிய அமைச்சர் தண்ணீரில் விழுந்தார்.

கரையில் இருந்த போலீசார் மற்றும் அரசியல் கட்சியினர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார் தண்ணீரில் இறங்கி அமைச்சர் மற்றும் அவருடன் இருந்த நிர்வாகிகளை லாவகமாக காப்பாற்றினர். படகு கவிழ்ந்த விபத்தில் அமைச்சர் தண்ணீரில் நிலை தடுமாறி நூலிலையில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படகு கவிழ்ந்து அமைச்சர் தண்ணீரில் விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.