கோர விபத்தில் 18 வயது இளைஞன் மரணம் !!
மகேலி எல்ல பிரதேசத்தில் இன்று (ஜூன் 10) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 18 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 9.40 மணியளவில் பாலிந்தநுவரயிலிருந்து மத்துகம நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் பஸ் சாரதி உட்பட 10 பேர் புளத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலிந்தநுவர கெலின்கந்த பிரதேசத்தில் வசித்து வந்த டில்ஷான் மதுரங்க என்ற 18 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.