அமைச்சர்கள் மீது கடுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தது எல்லோருக்கும் தெரிந்ததே. வெளிநாட்டுக்கு சென்றாலும் இங்கும் ஒரு ‘கண்’ வைக்க வேண்டுமல்லவா? அதனால் வெளிநாடு புறப்படுவதற்கு முன்பு உளவுத்துறைக்கு ஒரு ரகசிய உத்தரவு போட்டுள்ளார். அதாவது தான் இல்லாத நாட்களில் அமைச்சர்களின் செயல்பாட்டை கவனித்து கொள்ளுங்கள் என்பது தான் அந்த உத்தரவு. உளவுத்துறையும் உன்னிப்பாக கவனித்து நடந்த விஷயங்களை அறிக்கையாக தயார் செய்து முதலமைச்சர் வந்ததும் சமர்ப்பித்து இருக்கிறது.
அதில் 4 அமைச்சர்களை தவிர யாரும் கோட்டை பக்கம் வந்து பணிகளை கவனிக்கவில்லை. சிலர் கோடையை கொண்டாட கோட்டை நினைப்பை மறந்து கோடை வாசஸ்தலங்களுக்கு சென்றிருந்தார்களாம். அதை பார்த்ததும் துணிந்து இப்படியெல்லாம் நடந்து கொண்டார்களா என்று முதலமைச்சரின் முகம் மாறியதாம்.