தகிக்கும் தாமரை சொந்தங்கள்…!!
குளத்து தண்ணீரில் மலர்ந்து தள்ளாடும் தாமரை வெளியில் இருந்து பார்க்க அழகாகத்தான் இருக்கும். ஆனால் தண்ணீருக்கு அடியில் அதன் வேர்கள், கூடவே மலர்ந்துள்ள அல்லி, ஆம்பல் வேர்களும் சிக்கி தவித்த கதையாக தவித்து கொண்டிருக்கும். அதற்குள் யாராவது சிக்கினால் கூட தப்பிக்க முடியாது. கிட்டதட்ட அதே நிலையில் தான் தமிழக பா.ஜனதாவுக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல், கருத்து வேறுபாடுகள் நீயா? நானா? என்று மல்லு கட்ட வைத்துள்ளது.
இதற்கிடையில் பல்வேறு மத்திய அரசு கமிட்டிகளில் ஏற்கனவே இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டதும் முணு முணுக்கப்படுகிறது. நீண்ட காலமாக கட்சியில் இருப்பவர்கள் புலம்பாத குறையாக ஆதங்கப்படுகிறார்கள். தேர்தல் பணியாற்ற வேண்டிய காலகட்டத்தில் கட்சி இப்படி உங்களுக்குள் தள்ளாடுதே என்று தங்கள் கவலையை வெளியிட்டு வருகிறார்கள் தாமரை சொந்தங்கள்.