சஜித் அணியின் பெண் உறுப்பினருக்கு சிக்கல்!!
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையிலான கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கவர்ச்சிகரமான வட்டியை வழங்குவதாகக் கூறி, ஒருகோடியே 17 இலட்சம் ரூபாயை மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட கெஸ்பேவ நகர சபையின் முன்னாளர் உறுப்பினரே, இம்மாதம் 23ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை, கெஸ்பேவ பதில் நீதவான் சுனேத்ரா பெரேரா பிறப்பித்துள்ளார். பிலியந்தலையை வசிப்பிடமாகக் கொண்ட ஸ்ரீயாணிலதா பெரேரா என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் பல்வேறான செயற்பாடுகளுக்கு நிதியை பயன்படுத்துவதாகவும் பல்வேறு உறுப்பினர்களின் பெயரை பயன்படுத்தி 3 இலட்சம் ரூபாய் முதல் 25 இலட்சம் ரூபாய் வரையிலும் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இதுவரையிலும் மோசடி செய்துள்ளார் என்று முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அந்த பெண் உறுப்பினரின் மோசடிக்குள் சிக்கிக்கொண்ட 11 பேர். பொலிஸில் இதுவரையிலும் முறைப்பாடு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.