இந்தியாவால் உஷாரடைந்த பசில்!!
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ, அதிரடியான கட்டளையை பெரமுனவின் உறுப்பினர்களுக்கு பிறப்பித்துள்ளார்.
இந்தியாவால் விடுக்கப்படும் அழுத்தம் காரணமாக, மாகாண சபைத் தேர்தலே முதலில் நடக்கும். ஆகையால், அதற்கு தயாராகுமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அகில இலங்கை மாகாண சபை உறுப்பினர் மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.