நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடலின் மாதாந்த செவ்வழி நயன நட்பெழுச்சி ஒன்றுகூடல்!! (PHOTOS)
நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடலின் மாதாந்த செவ்வழி நயன நட்பெழுச்சி ஒன்றுகூடல் நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் வழங்கும் மாதாந்த செவ்வழி நயன நட்பெழுச்சி ஒன்றுகூடல் நல்லூர் மகேஸ்வரன் மணிமண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) நடைபெற்றது.
காலை 8.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை இடம்பெற்ற இந்த நிகழ்வில் வயது வேறுபாடின்றி அனைத்து சைவ நல்லுள்ளங்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மாலைகட்டுதல், கோலம் போடுதல், விவாத மேடைகள், சமய சுற்றுலா, தோரணம் கட்டுதல், வித்தியாசமான பிரசாத வகைகள் தயாரித்தல், போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேலும் இந்நிகழ்வானது எமது சைவசமய தமிழ் பண்பாட்டு விழுமியங்களையும், கலாச்சார கோட்பாடுகளையும் எமது எதிர்கால சந்ததியினருக்கு கடத்துவதற்கு ஊன்றுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.
படங்கள்: ஐ.சிவசாந்தன்