;
Athirady Tamil News

சீனிவாசமங்காபுரம் கோவிலில் சாக்ஷாத்கார வைபவ உற்சவம் 24 முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது!!

0

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் சாக்ஷாத்கார வைபவ உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சாக்ஷாத்கார வைபவ உற்சவம் வருகிற 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அதை முன்னிட்டு 22-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

3 நாட்களுக்கு தினமும் காலை 10 மணியில் இருந்து காலை 11 மணி வரை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 2-வது நாள் அனுமந்த வாகன வீதிஉலா, 3-வது நாள் கருட வாகன வீதிஉலா நடக்கிறது. வாகன வீதிஉலா தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடக்கிறது. 3 நாள் சாக்ஷாத்கார வைபவ உற்சவம் முடிந்ததும், 27-ந்தேதி ஸ்ரீவாரிமெட்டு அருகே அமைந்துள்ள பார்வேடு மண்டபத்தில் பார்வேடு உற்சவம் நடக்கிறது. சாக்ஷாத்கார வைபவ உற்சவத்தையொட்டி கோவிலில் 22-ந்தேதி திருப்பாவாடை சேவை, 24-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை நடக்கும் ஆர்ஜித கல்யாணோற்சவம் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.