மிக தீவிர புயலாக வலுப்பெற்றது பிபோர்ஜோய்- 15ம் தேதி குஜராத் கடற்கரையை தாக்க வாய்ப்பு!!
அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் தீவிர புயலாக வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று காலையில் மேலும் வலுவடைந்து மிக தீவிர புயலாக மாறியது. இன்று காலை 9 மணி நிலவரப்படி இந்த புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து தெற்கு தென்மேற்கில் 480 கிமீ தொலைவிலும், நாலியாவில் இருந்து தெற்கு-தென்மேற்கில் 610 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
தற்போது புயல் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் மேலும் நகர்ந்து வரும் 15ம் தேதி பிற்பகல் பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டிய குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.