காக்கோவா அணை மீதான தாக்குதலின் எதிரொலி – மூடப்பட்டது கடைசி அணு உலை!
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தின் கடைசி உலையை மூடி குளிர்விப்பதற்கான நடவடிக்கைகளை உக்ரைன் அணுசக்தி துறை எடுத்துள்ளது.
சப்போரிசுக்கா அணுமின் நிலையமானது உக்ரைனில் எனர்கதார் நகரில் உள்ளது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமும், உலகின் 10 பெரிய அணுமின் நிலையங்களில் ஒன்றுமாகும்.
2022 மார்ச் 4 இல், இவ் அணு மின் நிலையம் ரஸ்யாவால் கைப்பற்றப்பட்டது.
சமீபத்தில், ரஸ்யாவால் காக்கோவா அணை மீது குண்டு வீசி அணை தகர்க்கப்பட்டதையடுத்து அணு உலைகள் மூடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 5 அணு உலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கடைசி அணு உலையும் மூடி குளிர்விக்கப்பட்டுள்ளது.
அணை உடைப்பால் அணு உலைக்கு நேரடியாக எந்த பாதிப்பும் இல்லாவிட்டாலும் அணு மின் நிலையத்திற்க்கு நீரைக் கொண்டு வரும் குழாய்கள் உடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.