இந்தியாவில் 101 மில்லியன் மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
இந்தியாவில் 101 மில்லியன் மக்கள், அதாவது மொத்த மக்கள் தொகையில் 11.14% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சி இதழான “தி லான்செட்” நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 136 மில்லியன் மக்கள், அதாவது மொத்த மக்கள் தொகையில் 15.3% பேர், நீரிழிவு நோய்க்கு முந்தைய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் இந்த நிலை பொதுவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கணக்கெடுப்பின்படி, இன்சுலின் என்ற ஹார்மோன் உடலில் சரியாக உற்பத்தி செய்யப்படாமல், இருப்பதால், இந்த நோயாளிகளின் இரத்த சர்க்கரையின் அடர்த்தி மிகவும் அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தொற்றாத நோய்களை மதிப்பீடு செய்வதற்காக விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகக் கருதப்படுகிறது.