வைத்தியர்கள் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி !!
இலங்கையில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களில் 25% பேர் சிறுவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
இதையடுத்து, பாடசாலைகள் ஊடாக டெங்கு பரவுவதை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அந்த பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் நளீன் ஆரியரத்ன தெரிவித்தார்.
அத்துடன், வரலாற்றில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவான ஆண்டாக இந்த வருடம் அமையலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
தரவுகளின்படி, இலங்கையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,961 ஆகும். இதில் மேல் மாகாணம் அதிக ஆபத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.