பாகிஸ்தானில் கனமழை- வெள்ளத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 34 பேர் பலி!!
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்னு, டேரா, கரக் மற்றும் லக்கி மார்வார்ட் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில் சுமார் 70 வீடுகள் இடிந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.