வடக்கின் நிலைமை பற்றி சார்ள்ஸ் – சுமந்திரன் பேச்சு!! (PHOTOS)
வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்ற திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
வடக்கு மாகாண ஆளுநராக இருந்த ஜீவன் தியாகராஜா ஐனாதிபதியால் நீக்கப்பட்டு புதிய ஆளுநராக சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் முதல் தடவையாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.