50 டொலர்களுக்கு வாங்கிய நாற்காலியை ஒரு லட்சம் டொலர்களுக்கு விற்ற நபர்!
அமெரிக்காவில் ஒருவர் 50 டொலர்களுக்கு வாங்கிய நாற்காலியை ஒரு லட்சம் டொலர்களுக்கு விற்று நம்பமுடியாத இலாபத்தைப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இணைய விற்பனை தளம் மூலம் 50 டொலருக்கு வாங்கிய நாற்காலியையே அவர் 1 லட்சம் டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஜஸ்டின் கூறுகையில், இந்த நாற்காலியைப் பார்த்த நொடியே அதில் ஏதோ ஒரு சிறப்பு இருப்பதாகத் தெரிந்தது. ஆனால் அதை இவ்வளவு ரூபாய்க்கு விற்க முடியும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
கூகுளில் தேடியபோது, இது போன்ற சற்றே பழைய நாற்காலியின் விலை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் என்று பார்த்தேன்.
இந்த நாற்காலி தனக்கு இன்னும் சில ஆயிரங்களையாவது இலாபமாகத் தருவது உறுதி என நம்பியதாக அவர் கூறினார்.
பின்னர், ஏல நிறுவனமான சோத்பிக்கு கொண்டு வரப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது. நாற்காலிக்கு 25 முதல் 40 லட்சம் வரை ஏல நிறுவனம் எதிர்பார்த்தது.
ஆனால், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அந்த நாற்காலி 82 லட்சத்துக்கு விற்பனையானது.