;
Athirady Tamil News

ரஷ்யாவிற்கு எதிரான படை நடவடிக்கையில் உக்ரைனுக்கு முதல் வெற்றி !!

0

ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் தென் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மூன்று கிராமங்களை விடுவித்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ரஷ்யாவிற்கு எதிரான பதில் நடவடிக்கையில் முதலாவது வெற்றியை உக்ரைன் பதிவு செய்துள்ளது.

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பிளாஹோடத்னே மற்றும் நெஸ்குச்னே ஆகிய கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

மகரிவ்கா என்ற கிராமத்தையும் தமது படையினர் கைப்பற்றியுள்ளதாக உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மாலியார் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் 300 தொடக்கம் ஆயிரத்து 500 மீற்றர் வரை தமது படையினர் முன்னேறியுள்ளதாக கூறியுள்ள அவர், கைப்பற்றப்பட்ட பகுதிகளில் உக்ரைனின் தேசியக் கொடியை ஏற்றும் காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளார்.

எனினும் குறித்த கிராமங்கள் உக்ரைன் படையினரிடம் வீழ்ந்துள்ளதை ரஷ்யா இதுவரை உறுதி செய்யாத போதிலும், பதில் தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பதில் தாக்குதல்களை தமது படையினர் ஆரம்பித்துள்ளதை உக்ரைன் அதிபர் வெலோடிமீர் ஜெலென்ஸ்கி ஏற்றுக்கொண்டிருந்தார்.

எவ்வாறாயினும் தற்போது உக்ரைன் கைப்பற்றியதாகக் கூறும் கிராமங்கள், ஒப்பீட்டளவில் சிறியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சப்போறிஸஷியா பிராந்தியத்தில் உள்ள மற்றுமொரு அணையையும் ரஷ்ய படையினர் தகர்த்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உக்ரைன் படையினர் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் திட்டமிட்டு இந்த அணைகளை ரஷ்யா தகர்ப்பதாக உக்ரைன் இராணுவத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.