ரணில் – மொட்டு வெடித்தது மோதல் !!
இன்றையதினம் (12) அதிபர் ரணிலுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அதிபர் செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பல மாவட்ட தலைவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை என தெரியவருகிறது.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் இன்று (12) பிற்பகல் கூடி அதிபருடனான சந்திப்பில் பங்கேற்பதில்லை என தீர்மானித்துள்ளனர்.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, கட்சியின் சார்பில் கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்கலாம் எனவும், அதிபர், அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் நடத்தும் கலந்துரையாடல்களில் பங்கேற்க முடியாது எனவும் மாவட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிபர் உட்பட யாராக இருந்தாலும் எவரை அழைத்தாலும் அவர்களுக்கு சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டங்களுக்கு கட்சி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது கட்சி உறுப்பினர்களையும் தலைவர்களையும் அழைத்து வர வேண்டுமாயின், கட்சிக்கு அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.