அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம் – யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணையும் அமெரிக்கா!
உலக நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுதல், நாடுகளுக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்க்கும் பொது அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை காணப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அமைப்பு விளங்குகிறது.
கல்வி, பண்பாடு, அறிவியல் மற்றும் தொடர்பு துறைகளை ஊக்குவிக்கும் விதமாக யுனெஸ்கோ அமைப்பு செயல்படுகிறது.
யுனெஸ்கோ அமைப்பின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா இருந்து வந்தநிலையில், அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்த நேரத்தில் அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகி இருந்தது.
அதாவது இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான மோதலில் ஐ.நா வின் நிலைப்பாடு குறித்து எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை அமெரிக்கா எடுத்திருந்தது.
அந்தநேரத்தில், இஸ்ரேலும் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து வெளியேறி இருந்தது.
இந்தநிலையில், தற்போது மீண்டும் யுனெஸ்கோ அமைப்பில் இணைய விரும்புவதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.