உக்ரைனுக்கு வந்து குவியும் ஆயுதங்கள் -மற்றுமொரு ஐரோப்பிய நாடு வாரி வழங்குகிறது !!
டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் Troels Lund Poulsen மற்றும் வெளியுறவு அமைச்சர் Lars Løkke Rasmussen ஆகியோர் திங்களன்று முழு அளவிலான ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் உக்ரைனுக்கு வெடிமருந்துகளை மேலதிகமாக அனுப்பவுள்ளதாக அறிவித்தனர்.
எனினும் அவர்கள் அனுப்பவுள்ள புதிய இராணுவ உதவியின் விபரங்களை வெளியிடவில்லை, ஆனால் 2,000 பீரங்கி குண்டுகள் உட்பட சுமார் 33.5 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள வெடிமருந்துகள் என்று தெளிவுபடுத்தினர்.
“ரஷ்யாவிற்கு எதிரான பதிலடி தாக்குதல் அறிவிக்கப்பட்டதாக நாம் அனைவரும் பார்க்கும் சூழ்நிலை உள்ளது. அது மெதுவாகத் தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யர்களை தூரத்தில் வைத்திருக்க விரும்புகிறது. இப்போது அதற்கு பதிலளிக்க வேண்டிய நேரம் இது. இதற்கு அவர்கள் தேவையான திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். இது வெடிமருந்துகளுக்கும் பொருந்தும்” என்று டென்மார்க்கின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
உக்ரைனின் இராணுவத் தேவைகள் குறித்து அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து விவாதித்து வருவதாக டென்மார்க் பாதுகாப்பு அமைச்ர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த வாரம், பெல்ஜியம் 32.4 மில்லியன் யூரோ மதிப்புள்ள 105-மிமீ பீரங்கி குண்டுகளை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்தது.