உக்ரைனுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தயார் – நிபந்தனையுடன் ரஷ்யா அறிவிப்பு !!
ஒரு வருடங்கள் கடந்தும் முடிவில்லாமல் உக்ரைன் – ரஷ்யா யுத்தமானது நீடித்து வருகிறது.
இந்தநிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும், இருப்பினும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை மேற்கத்திய நாடுகள் நிறுத்தினால் மட்டுமே அது சாத்தியமாகும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நிபந்தனை விதித்துள்ளார்.
மொஸ்கோவில் இராணுவம் தொடர்பான இணையத்தள ப்ளக்கர்களுடன் கலந்துரையாடிய ரஷ்ய அதிபர்,
ரஷ்ய ஆயுதங்களின் தரம் தற்போது மேம்பட்டுள்ளதாகவும், அதேசமயத்தில் ட்ரோன் மற்றும் துல்லியமாக தாக்குதல் நடத்தக்கூடிய ஆயுத தயாரிப்பில் பின்தங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதவேளை, அமெரிக்கா வழங்கிய ஹிம்மர் ரொக்கெட்டுக்கள் மூலம் ககோவ்கா அணையை உக்ரைன் தகர்த்துள்ளதாக புடின் குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்த்தாக்குதலை தீவிரப்படுத்திய பின் ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் உக்ரைனுக்கு 10 மடங்கு உயிரிழப்புக்கள் அதிகம் என அவர் கூறியுள்ளார்.