அமெரிக்காவில் பரபரப்பாகும் ட்ரம்பின் கைது – பைடன் நிர்வாகம் மீது காட்டம் !!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மைக் காலமாக பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறார்.
அவரது சர்ச்சை பேச்சுகளால் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அதிபர் தேர்தல் சமயத்தில் அவர்மீது ஆபாச பட நடிகை ஒருவர் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்துபோது அரச ஆவணங்கள் சிலவற்றை அவரது வீட்டில் எடுத்துச்சென்று பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் திடீரென டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது ட்ரம்ப் மீது உள்ள 37 குற்றவியல் வழக்குகளில் 31 வழக்குகள் தேசிய பாதுகாப்பு தகவல்களை வேண்டுமென்றே பதுக்கிக் கொண்டது தொடர்பானவை.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான ட்ரம்ப் தான் தவறு செய்யவில்லை என்றும், வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரத்தில் மட்டும் ட்ரம்ப் மீது 7 குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.
2024 அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில் இப்படி நடப்பது சதிவேலை என ட்ரம்ப் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், டொனால்ட் ட்ரம்ப் மீது, ஏழு பிரிவுகளில், 37 குற்றங்கள் மியாமி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில், டொனால்ட் ட்ரம்ப் குற்றம் செய்துள்ளார் என்பதற்கான குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கில் இன்று (ஜூன் 13) ட்ரம்ப் மியாமி நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளர்.
2024 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடக்கூடாது என்பதற்காக ஊழல் நிறைந்த பைடன் நிர்வாகம் தன்னை போலியான குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கில் சிக்கவைத்துவிட்டது என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.
தான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால், பைடன் நிர்வாகம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன்மீது வழக்குபோட்டுள்ளது. தேர்தலில் தான் போட்டியிடுவதை தடுக்கவே இந்த நடவடிக்கையாகும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.