வாகன இறக்குமதியில் சிக்கல்!!
டொலர் நெருக்கடிக்கு வாகன இறக்குமதி முக்கிய காரணம் எனவும் அதனால் வாகன இறக்குமதி பல முறைகள் சிந்தித்து செய்ய வேண்டிய விடயம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
”கடன்முறையின் மூலம் வாகனங்களை இறக்குமதி செய்ய யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. நாடு இன்னும் கடன் நெருக்கடியிலேயே இருக்கின்றது. வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதே பெரும் சவாலாக இருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், கடன் முறை மூலம் வாகனங்களை இறக்குமதி செய்வது மிகவும் கவனமாக பரிசீலிக்கப்பட்டு செய்ய வேண்டிய விடயம் என அமைச்சர் தெரிவித்தார்.