ரூ.400-க்கு விற்பனையாகும் மட்டன் மேகி!!
சிற்றுண்டி வகைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்த உணவாக மேகி நூடுல்ஸ் மாறி உள்ளது. குறைந்த செலவில் சிறிது நேரத்தில் இதனை தயார் செய்ய முடியும் என்பதால் பலரும் இந்த நூடுல்சை விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்நிலையில் டெல்லியில் தெருவோர வியாபாரி ஒருவர் தயாரிக்கும் மட்டன் மேகி நூடுல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஹாரி உப்பல் என்பவர் பகிர்ந்துள்ள வீடியோவில், டெல்லியில் உள்ள ஒரு தெருவோர கடையை காட்டுகிறது. அங்கு வியாபாரி ஒருவர் மட்டன் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் மேகியை தயாரிக்க தொடங்குகிறார்.
அதில், சிறப்பு மசாலா மற்றும் காய்கறிகளை தூவி மேகியில் ஆட்டிறைச்சியை சேர்க்கிறார். இந்த நூடுல்ஸ் ரூ.400-க்கு விற்கப்படுகிறது. வீடியோவை பார்த்த வலைதள வாசிகள் இந்த உணவை சாப்பிட விரும்புவதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வீடியோ 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.