செந்தில் பாலாஜியை காவலில் எடுத்த அமலாக்கத்துறை- இன்று கையெழுத்து பெற்றனர்!!
அமலாக்கத்துறையால் கைதாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை காவலுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிமன்ற ஊழியர்கள் இன்று கையெழுத்து வாங்கினர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று சுய நினைவில் இல்லாததால் அவரிடம் கையெழுத்து வாங்க முடியாமல் போனது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் 8 நாள் போலீஸ் காவலில் எடுத்ததற்காக கையெழுத்தை பெற்றனர்.