திங்களன்று கொழும்பில் கூடுகிறது தமிழரசு!!
தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் திங்கட்கிழமை (19) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டம் இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ளதோடு இதில் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா உள்ளிட்ட அரசியல் உயர்பீடத்தின் அங்கத்தவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தின்போது, இறுதியாக கடந்த 8 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பிலும், எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.
மேலும், கடந்த ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது சம்பந்தன், வாக்குறுதி அளிக்கப்பட்ட விடயங்கள் உரியவாறு நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்து பேசப்போவதில்லை என்று காட்டமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.