வடகொரியாவில் அதிகரிக்கும் உணவு பற்றாக்குறை – மௌனம் காக்கும் அரசு !!
வடகொரியாவில் உணவு பற்றாக்குறை நிலவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2020 ஆம் ஆண்டு கொரோனா காராணமாக வட கொரிய அரசு அந்நாட்டு எல்லைகளை மூடியதை தொடர்ந்தே இவ்வாறான நிலைமைகள் தலை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எல்லைகள் முடக்கப்பட்ட பின் உணவின்றி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும், சிறிய குற்றங்களுக்கு கூட தூக்கிலிடும் தண்டனைகளும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் 2.6 பில்லியன் மக்களுக்கப் போதுமான உணவினை வடகொரிய அரசினால் வழங்க முடியவில்லை.
சீனாவில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்வதும் தடைப்பட்டுள்ள நிலையில், உணவின்றி பலர் தற்கொலை செய்து கொள்வதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1990களில் வடகொரியாவில் நிலவிய கடுமையான வறட்சியினால் 30 இலட்சம் பேர் பட்டினியால் உயிரிழந்தனர். அதேபோல், தற்போதும் உணவின்றி பலர் பட்டினியால் உயிரிழப்பதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மக்கள் ஒரு புறம் பசி கொடுமையால் மடிந்துக்கொண்டிருக்க மறுபுறம் ஏவுகணை பரிசோதனைகளை அரசு வெற்றிகரமாக செயற்படுத்தி கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கடந்த மூன்றாண்டுகளில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அரசின் கட்டுப்பாடுகள் அதிகரித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.