போதை பெண்ணை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம்- இந்திய மாணவருக்கு 6 ஆண்டு ஜெயில்!!
இங்கிலாந்தில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருபவர் பிரித் விகால் (வயது 20) இந்தியாவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு அங்கு நடந்த ஒரு விருந்தில் பங்கேற்றார். அப்போது இதில் 20 வயது இளம்பெண் ஒருவரும் கலந்து கொண்டார். அவர் நன்றாக மது அருந்தினார். போதை தலைக்கேறியதால் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. இதை பார்த்த பிரித்விகால் அந்த பெண்ணை கைத்தாங்கலாக வெளியில் அழைத்து வந்தார். பின்னர் தனது கையில் அந்த பெண்ணை சிறிது தூரம் தூக்கியபடி தான் தங்கியிருந்த அறைக்கு சென்றார். அங்கு போதையில் இருந்த பெண்ணை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரித் விகால் பாலியல் பலாத்காரம் செய்தார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து அந்த பெண் எழுந்தார்.
அப்போது தான் உடுத்தியிருந்த உடைகள் களைந்து கிடப்பதையும், உடலில் ரத்த காயங்கள் இருந்தது கண்டும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் பிரித் விகாலை கைது செய்தனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று அவர் போதையில் இருந்த இளம்பெண்ணை கையிலும், தோளிலும் தூக்கி சென்ற காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பான விசாரணை இங்கிலாந்து கோர்ட்டில் நடந்தது.இந்த வழக்கில் பிரித்விகாலுக்கு 6 ஆண்டு 9 மாதங்கள் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.