திருப்பதி கோவிலில் மழையை பொருட்படுத்தாமல் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் !!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வாரம் முழுவதும் கடும் வெயில் நிலவியது. இதனால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வெயிலில் தாக்கத்தால் கடும் அவதி அடைந்து வந்தனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட போதிலும் பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் திருப்பதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் லேசான மழை தொடங்கி இரவு முதல் பலத்த மழை வருகிறது. நேற்று 86 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.
வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ்சில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்து இருந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மழையில் நனைந்தபடி அவதி அடைந்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நேற்று 86,181 பேர் தரிசனம் செய்தனர். 30,654 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.59 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. இன்று காலை நேரடி இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரமானது.