காட்பாடி அருகே உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கவர்னர் பட்டம் வழங்கினார்!!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேர்க்காட்டில் திருவள்ளூர் பல்கலைக்கழகம் உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கலை அறிவியல் கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 17-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் கவர்னர் ஆர்.என். ரவி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். மொத்தம் 1 லட்சத்து 13,275 மாணவ- மாணவிகள் பட்டம் பெற்றனர். இதில் 1,12,711 மாணவ, மாணவிகள் நேரடியாக அனுமதிக்கப்படவில்லை. மீதமுள்ளவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தனது கைகளால் பட்டம் வழங்கினார்.
மத்திய மந்திரி வி.க. சிங் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம், பதிவாளர் விஜயராகவன் தேர்வு கட்டுப்பாட்டாளர் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கவர்னர் வருகையொட்டி 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.