பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் !!
பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
“430 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோகிராம் கோதுமை மா இப்போது சந்தையில் ரூ. 160 தொடக்கம் 170 வரையில் விற்கப்படுகிறது.
தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தைத் தவிர்க்க கோதுமை மா அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளது. எனவே கோதுமையின் விலை மீண்டும் அதிகரிக்கப்படாது என்ற உத்தரவாதத்தில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்கலாம்“ என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கோழி இறைச்சி விலையுயர்வை கட்டுப்படுத்துதல் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிார சபை விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்தார்.