10 லட்சத்தில் ஒன்று- வைரலாகும் உருண்டை வடிவ முட்டை!!
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாக்குலின் பெல்கேட் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் உருண்டை வடிவ முட்டை குறித்த காட்சிகள் உள்ளது. அங்குள்ள வூல்வொர்த் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பெண் ஒருவர் ஷாப்பிங் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு தான் உருண்டை வடிவ முட்டையை கண்டுள்ளார். Powered By VDO.AI பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரிந்ததால் உடனே அந்த முட்டையை வாங்கிய அவர் இதுபோன்ற வடிவில் வேறு எங்காவது முட்டைகள் இருக்கிறதா என கூகுளில் தேடிப்பார்த்துள்ளார்.
அப்போது 10 லட்சத்தில் ஒன்று தான் இதுபோன்ற வடிவில் இருக்கும் என தெரியவந்துள்ளது. கடைசியாக இது போன்று கிடைத்த ஒரு முட்டை இந்திய மதிப்பில் ரூ.1.14 லட்சத்திற்கு விற்பனையாகி இருப்பது தெரியவந்தது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் உருண்டை வடிவ முட்டை வீடியோ இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்துள்ளது.