உலக வான்கல சந்தையின் மிகப்பெரிய நிகழ்வு – மக்ரனின் பிரசன்னத்துடன் ஆரம்பம் !!
உலக வான்கல சந்தையில் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றான பரிஸ் வான்கல சந்தை மற்றும் கண்காட்சி கொரோனா தொற்றுக்கு பின்னரான நான்கு ஆண்டுகளில் இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளது.
பரிஸ் ஏர் ஷோ என அழைப்படும் இந்த நிகழ்வு இன்று முதல் எதிர்வாரும் ஞாயிறு வரை இடம்பெறவுள்ளது.
வார இறுதி நாட்களில் பொதுமக்கள் இந்த நிகழ்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2019 க்குப் பின்னர் முதல் முறையாக இன்று அதிகாரபூர்வமாக திரும்பிய ஐரோப்பிய விமான கண்காட்சி பரிஸ் லூ பூஜே விமான நிலையத்தில் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரனின் பிரசன்னத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரித்தானியா மற்றும் பிரான்சில் இந்த நிகழ்வு இடம்பெற்றுவரும் நிலையில் கொரோனா தொற்றுக்காரணமாக 2020 நிகழ்ச்சி மீளெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த வருடம் இந்த நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்தாலும், அது பெரியளவில் ஈர்ப்பை ஏற்படுத்தாக நிலையில், இந்த முறை பரிஸ் நிகழ்வு ஈர்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஆரம்பித்த இந்த வான்கல சந்தையில் குடிசார் மற்றும் இராணுவ வான்கங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் சமீபத்திய தயாரிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தவுள்ளனர்.
இந்த காட்சிப்படுத்தலில் வான்கலங்களின் பறக்கும் காட்சிகளும் இடம்பெறும். விமான உற்பத்தியாளர்கள் தங்கள் விமானங்களைக் காட்சிப்படுத்தி அவற்றுக்குரிய வாடிக்கையாளர்களை தேடும் நகர்வில் ஈடுபடுவதால் உலகின் முன்னணி வான்கலங்கல உற்பத்தி நிறுவனங்களான ஐரோப்பாவின் எயர்பஸ் மற்றும் அமெரிக்கா தளமாகக்கொண்ட போயிங் ஆகிய நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.