மத்திய வங்கியை சாடினார் கம்மன்பில !!
“ரூபாயை ஸ்திரப்படுத்ததல் மற்றும் அதைப் பேணுவது தான் இலங்கை மத்திய வங்கியின் கடமையாகும்.
ஆனால் ரூபாய் இப்பொழுது உருண்டோடும் பந்து போல் ஆகி விட்டது” என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ரூபாயை ஸ்திரப்படுத்த வேண்டிய தமது கடமையை மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் உணர்ந்து செயற்படாதவர்களாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.