;
Athirady Tamil News

5 மாநில சட்டசபை தேர்தல்-பாராளுமன்ற தேர்தல்: அமித்ஷா ரகசிய அலசல்!!

0

கர்நாடக சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்த பா.ஜனதா அடுத்து 5 மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அந்த 5 மாநிலங்களில் தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்றும் பா.ஜ.கவுக்கு மிக மிக முக்கியமான மாநிலங்களாகும். Powered By VDO.AI Video Player is loading. கர்நாடகா போல இந்த மாநிலங்களையும் பறிகொடுத்துவிடக்கூடாது என்பதில் பா.ஜனதா தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது. இதற்காகவே ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றங்களுக்கு மோடியும், அமித்ஷாவும் திட்டமிட்டு வருகிறார்கள். இதில் இறுதி முடிவு எடுப்பதற்காக அமித்ஷா நேற்று டெல்லியில் ஓசையின்றி அதிரடி அலசலில் ஈடுபட்டார். அவருடன் ஜே.பி.நட்டா, சந்தோஷ் உள்பட சில தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த சில தலைவர்களும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அப்போது பிரதமர் மோடி அமெரிக்கா, எகிப்து சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு வந்ததும், மத்திய மந்திரி சபையில் சிறு மாற்றம் செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது. மத்திய மந்திரிகளில் சிலரை 5 மாநில தேர்தலுக்கு பொறுப்பாளராக அனுப்ப ஆலோசிக்கப்பட்டது. இது தவிர பாராளுமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என்றும் அமித்ஷா தகவல்களை கேட்டு அறிந்தார். மோடி எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேரணிகளில் பங்கேற்க வேண்டும் என்பது பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது. ஆனால் இந்த தகவல்கள் பா.ஜ.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்குக் கூட முழுமையாக தெரியவில்லை. அந்தளவுக்கு அமித்ஷா ரகசியமாக காய்களை நகர்த்த தொடங்கி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.