இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 36 ஆக குறைந்தது!!
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 63 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு 36 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 579 ஆக குறைந்து உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 101 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து 838 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,844 ஆக சரிந்துள்ளது. இது நேற்றை விட 66 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் நேற்று டெல்லியில் ஒருவர் இறந்துள்ளார். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 897 ஆக உயர்ந்துள்ளது.