எலுமிச்சை தோலின் நன்மைகள் !! (மருத்துவம்)
எலுமிச்சை அருமையான மருத்துவக் குணங்களை தன்னுள் கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும். இதுவரை எலுமிச்சை சாற்றில் மட்டும்தான் மருத்துவக் குணங்கள் நிறைந்திருக்கின்றது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால், அதன் தோலிலும் அதிகமான மருத்துவக்குணங்கள் இருக்கின்றது. நம் உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஏராளமான நோய்களின் பாதிப்பில் இருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடிய சிறந்த மருந்தாக எலுமிச்சையின் தோல் விளங்குகின்றது. அதற்காக நம்மால் எலுமிச்சையின் தோலை அப்படியே கடித்து சாப்பிட்டுவிட முடியாது.
இதற்கு காரணம், அதன் தோலில் உள்ள கசப்புத் தன்மைதான், வேறு எப்படி எலுமிச்சையின் தோலை சாப்பிடலாம் என்று நீங்கள் கேட்கலாம்…
எலுமிச்சையின் தோலை சாப்பிடுவதற்கு சிறந்த வழி… எலுமிச்சையை நீரில் நன்றாக கழுவி, துடைத்துவிட்டு குளிர்சாதனப்பெட்டியில் (ப்ரீசரினுள்) வைத்து நன்றாக உரையவைத்து, பிறகு அதனை துருவிக் கொள்ள வேண்டும். துருவிய எலுமிச்சையை எடுத்து, நமக்கு பிடித்த உணவுகளின் மீது சிறிது தூவி சாப்பிடலாம்.
இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் ஏற்படும் பல நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இதன் நன்மைகள்
* எலுமிச்சையின் தோலில் தான் அதிகமான ஆர்கானிக் உட்பொருட்கள் உள்ளன.
* தோலில் 5 – 10 மடங்கு அதிகமான விற்றமின்களும் இதர நன்மைகளும் அடங்கியுள்ளன.
* குறிப்பாக தோலில் விற்றமின் “சி”,“பி6”,“ஏ” காணப்படுகின்றது.
* அத்துடன், இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், புரோட்டீன், ரிபோஃப்ளோவின், நியாசின் போன்ற விற்றமின்கள் காணப்படுகின்றன.
* உறையவைக்கப்பட்ட எழுமிச்சைத் தோல் பல்வோறு வகையான புற்றுநோய்க் கட்டிகள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், அதிகமான அமிலச் சுரப்பு, அடிக்கடி காய்ச்சல் வருவது போன்றவற்றை தடுப்பதுடன், உடல் எடையையும் குறைக்கும்.
* எலுமிச்சை தோலில் உள்ள சிட்ரிக் அமிலம் பக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, உடலையும் சருமத்தையும் ஆரோக்கியமாகவும் பொலிவோம் வைத்துக் கொள்வதற்கு உதவும்.