டுவிட்டர் முன்னாள் சிஇஓ குற்றச்சாட்டு: எலான் மஸ்க் சொல்வது என்ன? !!
இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது அரசுக்கு எதிராகவும், விவசாய போராட்டத்தை ஆதரித்தும் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜேக் டார்சி குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு மத்திய அமைச்சர் பதிலடியும் கொடித்திருந்தார். Powered By VDO.AI Video Player is loading. அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, நியூயார்க்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமெரிக்க பிரமுகர்களை சந்தித்தார். டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் அதில் ஒருவர்.
தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். மோடியை சந்தித்த பின், டுவிட்டரின் முன்னாள் சிஇஓ-வின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எலான் மஸ்க் கூறியதாவது:- எந்த நாட்டிலும் அந்த நாட்டின் சட்டத்தை பின்பற்றுவது நமக்கு சிறந்தது. அதைத்தாண்டி செய்வது இயலாத காரியம். சட்டத்திற்கு உட்பட்டு கருத்துரிமை தகவலை கொண்டு செல்ல சிறப்பாக செயல்படுவோம் என்றார். மேலும், ”டெஸ்லா இந்தியா சந்தைக்கு வர வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, ”அடுத்த ஆண்டு இந்தியா செல்ல இருக்கிறேன். இந்தியாவில் டெஸ்லா விற்பனைக்கு வரும் என நம்புகிறேன். பிரதமர் மோடியின் ஆதரவுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். சில விசயங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை” இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்தார்.