இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யோகா நாள் நிகழ்வு!! (PHOTOS)
ஒன்பதாவது சர்வதேச யோகா நாள் நிகழ்வு யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெற்றது
யாழ் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட யோகா நாள் நிகழ்வில் யோகா பயிற்சி வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், யாழ்ப்பாண படைகளின் கட்டளைத் தளபதி ஹெட்டியாராச்சி, யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டதோடு
யோகா பயிற்சி நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் கல்வியிலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.