யாழில். பாண் 150 ரூபாய்!!
யாழ்ப்பாணத்தில் பாணின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டு 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக யாழ்.மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் ஊடக அறிக்கை ஊடாக அறிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை இன்றைய தினம் புதன்கிழமை தொடக்கம் 10 ரூபாயால் குறைத்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளோம்.
தற்பொழுது பாணின் விலையை மாத்திரமே குறைத்துள்ளோம். ஏனைய பேக்கரி உற்பத்திகளின் (பணிஸ் உள்ளிட்டவை) விலையை குறைக்கவில்லை.
எதிர்வரும் காலங்களில் மாவின் விலை குறைக்கப்படுமாயின் அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க தயாராக உள்ளோம் என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.