அடுக்குமாடி கட்டடத்தின் உள்ளே விசித்திர புகையிரத பாதை – எங்கே தெரியுமா…!
அடுக்குமாடி கட்டடத்தின் ஊடாக செல்லும் புதிய புகையிரத தொழில்நுட்பம் உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
சீனாவின் புகையிரத துறை மிகப்பெரியது. சீனாவில் மக்கள் வசிக்கும் 19 மாடி குடியிருப்பு கட்டடத்தின் ஊடாக புகையிரத பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த கட்டடத்தில் புகையிரத நிலையமும் செயல்படுகிறது. இந்த அடுக்குமாடியில் 6 ஆவது மற்றும் 8 ஆவது தளத்தின் ஊடாக புகையிரத தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு அதன் வழியே தினமும் புகையிரதங்கள் சென்றுவருகின்றன.
இந்த ரயில் பாதை சீனாவின் மலை நகரம் என அழைக்கப்படும் சுன்கிங் என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நிறைய உயரமான கட்டிங்கள் இருப்பதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் புகையிரத பாதை அமைக்கும்போது 19 மாடி கட்டிடம் குறுக்கே இருந்துள்ளது.
இதனையடுத்து பொருளியலாளர்கள் வித்தியாசமாக சிந்தித்து அந்தக் கட்டடத்தின் நடுவே புகையிரத பாதையை அமைத்துள்ளார்கள்.
கட்டடத்தின் குறுக்கே புகையிரதம் செல்வதால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக சைலென்சிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புகையிரதம் செல்லும் சத்தம் மக்களின் காதுகளில் விழாது.
சீனா தற்போது அதி நவீன புகையிரத தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வருகிறது.
சீனாவில் தான் உலகின் முதல் தண்டவாளங்கள் இல்லாமல் ரயில் செல்லும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.